புதுவை: ராமச்சந்திரன் சபாநாயகராக நீடிப்பாரா?
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகராக டி.ராமச்சந்திரன் நீடிப்பதில் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏக்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் திமுக அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகராக டி.ராமச்சந்திரன் பதவி வகிக்கிறார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவராக சிலவாரங்களுக்கு முன்பு வரை இருந்தார்.
ஆனால் சண்முகம் தலைமையிலான அரசு மாறி ரங்கசாமி புதிய தலைவரான பிறகு அதிமுக, காங்கிரஸ் இடையேகருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் அரசுக்கு அளித்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றுக் கொண்டது. ராமச்சந்திரனையும்உடனடியாக சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட்டது.
ஆனால் துணை சபாநாயகர் பதவியில் இல்லாததால் தான் ராஜினாமா செய்ய முடியாது என்று ராமச்சந்திரன் கூறிவிட்டார். இதையடுத்து அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். ஆனால் தற்போது தொடர்ந்து அப்பதவியில் இருந்துவருகிறார்.
தற்போது ராமச்சந்திரன் சபாநாயகர் பதவியில் தொடர்வது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் சில எம்.எல்.ஏ.க்கள்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து 6 எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம்எழுதியுள்ளனர். அதில் உடனடியாக ராமச்சந்திரனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆனால் மாநிலத் தலைவர் நாராயணசாமியும், தலைவர் ரங்கசாமியும் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருப்பதாகத்தெரிகிறது.
இதற்கிடையே, ராமச்சந்திரன் தற்போது எந்தக் கட்சியையும் சாராதவராக இருக்கிறார். சபாநாயகர் என்பவரும்அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே ராமச்சந்திரன் நீடிப்பதில் தவறில்லை என்று திமுக கூறியுள்ளது.
ராமச்சந்திரன் சபாநாயகராக நீடிப்பாரா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சிதான் இனி முடிவு செய்யவேண்டும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications