பொடோவை எதிர்ப்பவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவாமி
சென்னை:
தற்போது தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குப் பிறகாவது பொடோ சட்டத்தைஎதிர்த்தவர்கள் தங்கள் செய்கைகளுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.
இன்று (வியாழக்கிழமை) காலை நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம்தெரிவித்துள்ளன.
டெல்லியிலிருந்து இது குறித்து சுவாமி ஒரு பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார். பொடோ சட்டத்தை எதிர்த்த எதிர்க்கட்சிகள் தங்கள் குறுகிய பார்வைக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இதற்குப் பரிகாரம் தேடும் விதமாகஎதிர்க் கட்சித் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதில் சுவாமிகூறியுள்ளார்.
இந்தத் தீவிரவாதச் செயலுக்கு இந்திய அரசாங்கமும் தக்கபடி பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தபோது, தான் நாடாளுமன்றத்தின் வெளிப்புற வாசலுக்கும் வெளியே வந்துவிட்டதாகஅந்த பேக்ஸ் செய்தியில் கூறியுள்ள சுவாமி, டெல்லி போலீசார் உடனடியாகச் செயல்பட்டிருக்காவிட்டால்தீவிரவாதிகள் நாடாளுமன்றக் கட்டடத்தை முழுவதுமாகத் தகர்த்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாமக, இந்திய தேசிய லீக் கண்டனம்:
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியும் இந்திய தேசிய லீக்கும் நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளன.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர்ராமதாசும் இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப்பும் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications