இந்தியா 291க்கு ஆல் அவுட்: டெண்டுல்கர் சதம்
அகமதாபாத்:
இந்தியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் தட்டுத் தடுமாறி சதமடித்த போதிலும்,291 ரன்களுக்கு இந்தியா முதல் இன்னிங்சை இழந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளான இன்று(வியாழக்கிழமை) இந்திய அணியினர் மிகவும் திணறினர்.
இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 71 ரன்கள் என்ற இரண்டாவது நாள் ஸ்கோருடன் இன்று ஆடத் தொடங்கியஇந்திய அணி வந்த வேகத்திலேயே ராகுல் டிராவிட்டின் (7 ரன்கள்) விக்கெட்டையும் கேப்டன் சவுரவ் கங்குலியின்(5 ரன்கள்) விக்கெட்டையும் இழந்தது.
ஆனால் டெண்டுல்கரும், வி.வி.எஸ். லக்ஷ்மணும் நின்று நிதானமாக ஆடி, இந்திய அணியின் ஸ்கோரைக்கணிசமாக உயர்த்தினர்.
டெண்டுல்கர் வெகு சிறப்பாக ஆடி 197 பந்துகளைச் சந்தித்து 103 ரன்களைக் (15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்)குவித்தார். லக்ஷ்மணும் தன் பங்குக்கு 75 ரன்களைச் (192 பந்துகள், 9 பவுண்டரிகள்) சேர்த்தார்.
ஆனால் இந்திய அணியில் அடுத்து விளையாடிய யாருமே சோபிக்காத காரணத்தால், 291 ரன்களுக்கு இந்தியாஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது விட்டது.
இதையடுத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இந்தியா 116 ரன்களைக் குறைவாகஎடுத்துள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆட ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர், ஆரம்பத்திலேயே அதிரடிஆட்டத்தை ஆட ஆரம்பித்தது.
இன்றைய ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி, மூன்றே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்களைஎடுத்துள்ளது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 407/10 (144.3 ஓவர்கள்)
இந்தியா - 291/10 (120.3 ஓவர்கள்)
2வது இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 15/0 (3 ஓவர்கள்)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications