அவை ஒத்திவைப்பால் தப்பிய எம்.பிக்கள்
டெல்லி:
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது 400 எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தனர்.
அவர்களில் எதிர்க் கட்சி எம்.பிக்கள் தங்கள் கட்சித் தலைவர்களின் அறைகளில் இருந்தனர். ஆளும் கட்சியினர்அமைச்சர்களின் அறைகளில் இருந்தனர். மேலும் பலர் நூலகத்தில் இருந்தனர்.
தாக்குதல் தொடங்கியவுடன் நாடாளுமன்ற வளாகங்களில் இருந்த எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிஅருகில் இருந்த அமைச்சர்களின் அறைகளில் நுழைந்தனர்.
இதையடுத்து அமைச்சர்களின் அறைக் கதவுகளை இழுத்து மூடிய பாதுகாப்புப் படையினர் வாயில்களில்பாதுகாப்பாக நின்று கொண்டனர்.
இது தவிர நாடாளுமன்றத்துக்கே உரிய தனிப் பாதுகாப்புப் படையும் உடனடியாக நடவடிக்கைளில் இறங்கியது.அவர்கள் வெளியில் இருந்த எம்.பிக்கள், அமைச்சர்களை இழுத்துச் சென்று பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தினர்.
நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படாமல் இருந்திருந்தால், அனைத்து எம்.பிக்களும் ராஜ்யசபாவிலும்லோக்சபாவிலும் இருந்திருப்பர். அப்போது அந்த அவைகளுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியிருந்தால் பெரிய அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும்.
அனைத்துத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட பின்னர் தான் அமைச்சர்கள், எம்.பிக்கள் வெளியில் செல்லஅனுமதிக்கப்பட்டனர். முதலில் பெண் எம்.பிக்களை பாதுகாப்பாக வெளியேற்ற பாதுகாப்புப் படைகளுக்குநாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ராணுவ பஸ்சில் பெண் எம்.பிக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேலும் இரு ராணுவபஸ்களில் மற்ற எம்.பிக்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தபோது டெல்லியில் சார்க் அமைப்பின் நிகழ்ச்சியில் இருந்தார் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன். தாக்குதல் குறித்து அவரது பாதுகாவலர் காதருகே சென்று கூறினார். இதையடுத்து நிகழ்ச்சியைஅவசரமாக முடித்துக் கொண்டு ஜனாதிபதி அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் தனது மாளிகைக்குக் கிளம்பினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் ஆகியோரும் பாதுகாப்பாகவீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications