செப்.11 தாக்குதல்: ஒசாமா பேசிய வீடியோ வெளியீடு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்பதற்கான வீடியோ ஆதாரத்தை நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்கா வெளியிட்டது.
ஜலாலாபாத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிதைந்து போன ஒரு வீட்டிலிருந்து இந்த வீடியோ கேசட்டைஅமெரிக்க உளவுத் துறையினர் கைப்பற்றினர்.
"உலக வர்த்தக மையத்தில் விமானத் தாக்குதலை நடத்தும்போது, குறிப்பிட்ட சில மாடிகள் மட்டும்தான் சேதமாகும்என்று நினைத்தேன். ஆனால், அந்த இரு கட்டடங்களும் முழுவதுமாக தரைமட்டமாகும் என்றுஎதிர்பார்க்கவில்லை" என்று பின் லேடன் அந்தக் கேசட்டில் கூறிக் கொண்டிருந்தான்.
"மேலும், தீவிரவாதிகள் அந்த விமானங்களில் பயணம் செய்வது வரை அவர்கள் தற்கொலைத் தாக்குதலுக்குத்தான்சென்று கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது" என்றும் பின் லேடன் அந்தக் கேசட்டில்கூறியுள்ளான்.
"கடைசி வரை அந்த சகோதரர்களுக்கே இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்போவது பற்றி தெரியாத போதிலும்,அவர்கள் இருவருக்கும் நன்றாகப் பயிற்சி கொடுக்கப்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்லுங்கள் என்று மட்டும்தான்முதலில் கூறினேன். விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்னர்தான் தாக்குதலை நடத்த அவர்களுக்குஉத்தரவிடப்பட்டது" என்றும் பின் லேடன் கூறியுள்ளான்.
அராபிய மொழியில்தான் பின் லேடன் அந்தக் கேசட்டியில் பேசியுள்ளான். இந்தப் பேச்சைப் பல அராபியமொழிபெயர்ப்பாளர்கள் மூலம் பல நாட்கள் உட்கார்ந்து அமெரிக்க அதிகாரிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.
அமெரிக்காவில் நடந்த விமானத் தாக்குதல்களுக்கு பின் லேடன்தான் காரணம் என்றும் அதற்கான வலுவானஆதாரம் கிடைத்திருப்பதாகவும் ஏற்கனவே அமெரிக்கா கூறியிருந்தது.
அதன்படி நேற்று இந்த வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications