இனி, கலெக்டர் அலுவலகங்களிலேயே பாஸ்போர்ட்
சென்னை:
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் விற்கவும்,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள மதிவதனன் நிருபர்களிடம் கூறுகையில்,
பாஸ்போர்ட் வாங்குவதற்கான சிறு, சிறு சந்தேகங்களை கேட்பதற்காக மக்கள் பல நகரங்களில் இருந்தும் சென்னைஅல்லது திருச்சிக்கு வர வேண்டி உள்ளது. பொது மக்களின் இந்த குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைஎடுக்கப்படும்.
அதன்படி இனிமேல் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்விற்கப்படும். இதற்காக மாநில உள்துறை செயலாளருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலேயே பூர்த்தி செய்யப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறுவதற்காகஒவ்வொரு கலெக்டர் அலுவலகங்களிலும் மாவட்ட பாஸ்போர்ட் செல் அமைக்கப்படும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி, போலீஸ் அதிகாரி ஆகியோர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைசரி பார்த்து மாநில சி.ஐ.டி. அலுவலகத்திற்கும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்புவர்.
இது நான்கு வாரங்களுக்குள் முடிவடைந்து விடும். இதற்காக ரூ.200 வசூலிக்கப்படும். ஆன்லைன் மூலம்பாஸ்போர்ட் குறித்தான சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது பாஸ்போர்ட் கிடைக்க 45 நாட்கள் ஆகின்றன. இனிமேல் 10 நாட்களில் பாஸ்பாாேர்ட் கிடைக்க ஏற்பாடுசெய்யப்படும். இனி அனைத்து மாவட்ட தலைநகரங்கள், தாலுகாக்களில் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்துவருகின்றோம் என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications