அமெரிக்க தாக்குதலில் 60 அல்-கொய்தாவினர் சாவு
Subscribe to Oneindia Tamil
தோரா போரா:
ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைப் பகுதிகளில் 60 அல்-கொய்தா படையினரின் உடல்கள்கண்டெடுக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கமாண்டர் ஒருவர் கூறினார்.
எஞ்சியவர்கள் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் பழங்குடியினப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில்கொல்லப்பட்டனர்.
நேற்று (சனிக்கிழமை) இரவு நடந்த சண்டையில் ஐந்து ஆப்கானிய வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இன்னும் பின் லேடனைக் கண்டுபிடிக்க முடியாததால், தோரா போரா மலைப் பகுதிகளில் உள்ளகுகைகளில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை மழையாகப் பொழிந்து வருகின்றன.
மறுபுறம் ஆப்கானியப் பழங்குடிப் படையினரும் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications