நாடாளுமன்ற தாக்குதல்: கோவை கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
நாடாளுமன்றம் மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை கண்டித்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் 800 கைதிகள்நேற்று (சனிக்கிழமை) உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டம் கோயம்புத்தூர் மத்திய சிறையில் வழக்கமாகிவிட்டது. அதிகாரிகளை கண்டித்துஅல்-உம்மாவினரும், தமிழக அரசை கண்டித்து தமிழ் தீவிரவாதிகளும் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
நேற்று காலை சிறை நிர்வாகம் கைதிகளுக்கான உணவை வழக்கம் போல வழங்கியது. பல்வேறு பிளாக்குகளில்அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சுமார் 800 பேர் உணவை பெற மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டனர்.
சிறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்ததில், டில்லியில் நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதைகண்டித்து இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இரவு வரை உணவைஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் பிடிவாதம் பிடித்தனர்.
கைதிகளுடனான சமாதன பேச்சு எடுபடாத நிலையில், அதிகாரிகள் திரும்பிவிட்டனர். அமெரிக்காவை கண்டித்துஅல்-உம்மாவினர் சில நாட்களுக்கு முன் நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு, பதிலடி கொடுப்பதற்காகதற்போது இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத் துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
சிறையில் உள்ள இரு பிரிவினரும் மாறி, மாறி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது சிறை அமைதிக்கு உதந்தது அல்லஎன மத்திய, மாநில உளவுத் துறைகள் எச்சரிக்கை செய்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications