சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 8 நாட்களாகஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று கொட்டும் மழையில் கூட அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த நால்வர் குழு இன்று விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தது.சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் இதற்குக் காரணமான போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினர்.
நீதிமன்றத்தைப் புறக்கணித்த வழக்கறிஞர்கள்
இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய போலீசாரை கைது செய்யக்கோரி தமிழகம் மற்றும்புதுவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷம்எழுப்பினர். தஞ்சாவூர், திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலும் வழக்கறிஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
இதனால் இன்று நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications