தமாகா தான் தமிழகத்தின் 3வது பெரும் கட்சி: ஜி.கே. வாசன்
மதுரை:
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு அடுத்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா)தான் மிகப் பெரும்அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் வாசன்.முதற்கட்டமாக அவர் மதுரை மாவட்டத்தில் தமாகா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.
மதுரையில் அவர் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றுகையில் கூறியதாவது:
எளிமையான, திறமையான ஆனால் முழுமையான "காமராஜர் ஆட்சி"யை தமிழகத்தில் கொண்டுவருவதுதான்தமாகாவின் முக்கியக் கொள்கை என்பதில் மாற்றமே இல்லை.
மேலும் தமிழகத்தில் தமாகா உருவான காலத்திலிருந்து நம் கட்சிதான் எப்போதும் மூன்றாவது பெரும் அரசியல்கட்சியாக நிலைத்து வந்துள்ளது.
அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக தமாகாதான் விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்துஈடுபடுங்கள். அப்படிச் செய்தாலே நாம் நம் கட்சியை இன்னும் அதிக அளவில் பலப்படுத்த முடியும்.
தமாகா தொண்டர்களாகிய நீங்கள் என்னுடைய நம்பிக்கையைப் பெறுவதைவிட, மக்களின் தன்னம்பிக்கையைப்பெறும் முயற்சியில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல் அரசியல் லாபத்திற்காகவோ கட்சிப் பதவிக்காகவோதான் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்றும்யாராலும் சொல்ல முடியாது. இதை தமிழக மக்களுக்கும் நான் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
தமாகா தொடர்ந்து தன்னுடைய தனித்தன்மையை நிலைநிறுத்தும். காங்கிரஸ் கட்சியுடன் எங்கள் கட்சிஇணைவதற்கான வாய்ப்பே இல்லை. இதுபோன்ற புரளிகளை நம் தொண்டர்கள் யாரும் நம்பிவிடக் கூடாதுஎன்றார் வாசன்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications