மெரீனாவில் கண்ணகி சிலை அகற்றம்: ஜெயாவுக்கு ஜோதிடர் ஆலோசனையா?
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்டு, அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.சிலை இருந்த பீடமும் இடித்து தள்ளப்பட்டு, அங்கு தார் ரோடு போடப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையின் முக்கிய இடத்தில், சீரணி அரங்குக்கு எதிரே சாலையோரத்தில் கண்ணகி சிலைவைக்கப்பட்டிருந்தது. திமுக முதல் முறையாக கடந்த 1968ல் ஆட்சிக்கு வந்தபோது, அப்போதைய முதல்வர்சி.என். அண்ணாதுரையால் திறந்து வைக்கப்பட்ட சிலை இது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி ஒரு கையில் சிலம்புடன், தலைவிரிகோலமாக, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கும்கோலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் கண்டுகளிக்கும்வகையில் இந்த சிலை இருந்தது.
இந்த சிலை மீது சில நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று மோதியது. இதனால் சிலையின் பீடம் சிறிதளவுசேதமடைந்தது. பீடத்தை சீர் செய்வதை விட்டுவிட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறையினர் இச்சிலையை திடீரென அகற்றினர்.
கிரேன் மூலம் சங்கிலியால் கட்டி லாரி ஒன்றில் சிலையை ஏற்றிக் கொண்டு சென்றனர். பீடமும் இடித்துதரைமட்டமாக்கப்பட்டு, அந்த இடத்தில் படுவேகத்தில் தார் சாலை போடப்பட்டது. இந்த சிலை அரசுஅருங்காட்சியகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் கூறியதால் ஜெ. நடவடிக்கை?
போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் வழியில் இந்த சிலை உள்ளது. இதை பார்த்துவிட்டு போவது நல்லது இல்லை என்றும், சிலை எடுத்த கண்ணகியால் பாண்டியன் அரசே பறிபோனது என்றும்அதனால் ஜெயலலிதா கண்ணில் படாத இடத்தில் இந்த சிலை இருப்பதே நல்லது என்றும் ஜோதிடர்கள்தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் சிலை மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கேட்டபோது, சிலையை அகற்றியதில் எவ்விதஉள்நோக்கமும் இல்லை. சேதமடைந்து விட்டதால் இச்சிலையை அகற்றினோம்.மேலும் அந்த இடம்போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வேறு இடத்தில் சிலையை வைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
விரைவில் மெரீனா கடற்கரையிலேயே சீரணி அரங்குக்கு அருகில் பாதசாரிகள் நடப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிமூடப்பட்டு, அங்கு இச்சிலை நிறுவப்படும் என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
பன்னீர் விளக்கம்:
கண்ணகி சிலை அகற்றப்பட்டதற்கு வாஸ்து சாஸ்திரமெல்லாம் காரணமில்லை. அதிலெல்லாம் தமிழக அரசுக்குநம்பிக்கையும் இல்லை என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
கண்ணகி சிலையை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தார் சாலையை போட்டதற்கு பல கட்சிகளும் கண்டனம்தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தலைமைசெயலகத்தில் முதல்வர் நிருபர்களிடம் கூறுகையில், கண்ணகி சிலை அதே இடத்திலேயோஅல்லது வேறு ஏதாவது இடத்திலேயோ விரைவில் நிறுவப்படும் என்றார்.
சிலையை அகற்றியதற்கு வாஸ்து சாஸ்திரம் தான் காரணமா என்று கேட்டதற்கு, அதிமுக அரசுக்கு அதிலெல்லாம்நம்பிக்கையில்லை. சிலையை தாங்கி நிற்கும் பீடம் சேதமடைந்ததாலேயே சிலையை அகற்ற வேண்டிய நிலைமைஏற்பட்டது என்றார் பன்னீர்செல்வம்.
திமுகவும் பிற கட்சிகளும் இதைப்பற்றி கண்டனப் போராட்டம் நடத்தப்போவது பற்றி கேட்டதற்கு, பெரியார்மையம் இடிக்கப்பட்டபோது எந்த கண்டனத்தையும் வெளியிடாத கருணாநிதி, இதற்கு கண்டத்தை அறிவித்ததுஅதிசயமாக உள்ளது என்று பன்னீர்செல்வம் ஆச்சரியப்பட்டார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications