திமுக ஆட்சி பாலங்கள் ஊழல்: கமிஷன் விசாரணை
சென்னை:
திமுக ஆட்சியில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களில் நடந்துள்ள முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரித்துவரும் நீதிபதி என்.ஆறுமுகம் கமிஷன் இன்று பெரம்பூர் மேம்பாலத்தை பார்வையிட்டது.
இந்தப் பாலம் திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் கண்காணிப்பின் கீழ்கட்டப்பட்டது.
ஆனால், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு தூண் மண்ணில் புதைந்துவிட்டது. இதனால், பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டது. முதலில் சரியாக மண்ணின் தரத்தை ஆராயாமல் இந்தப் பாலம் கட்டப்பட்டதாக புகார்எழுந்தது.
மேலும் இந்தப் பாலத்தை கட்டியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாகத் தான் திமுக தலைவர் கருணாநிதியும் ஸ்டாலினும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஊழல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் கமிட்டிஅமைக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற தமிழக அரசின் தலைமை என்ஜினியர்களான ரத்தினவேலு, ஷியாமளாதேவி தம்புராட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பாலத்தை பார்வையிட்ட பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆறுமுகம் கூறுகையில்,
இந்திய சாலை அமைப்பு விதிகள் மீறி இந்தப் பாலம் கட்டப்பட்டதா என்பதை விசாரித்து வருகிறோம். விசாரணைமுடிந்தவுடன் அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.
சென்னையில் மட்டும் திமுக ஆட்சியில் 10 பாலங்கள் கட்டப்பட்டன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications