சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம்
சென்னை:
போலீசார் தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்குதலா ரூ.10,000ம், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு தலா ரூ.5,000ம்கருணைத்தொகையாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கடந்த 7ம் தேதி போலீசார் தாக்கியதை தொடர்ந்து, மாணவர் விஜயன்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லட்சுமி நாராயணன் தலைமையிலானநால்வர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த நால்வர் குழு மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில்பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன், தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்உள்நோயாளயாக சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000, வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு ரூ.5,000 கருணைத் தொகையாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
பிறகு முதல் டிவிஷன் பெஞ்ச் தன் உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு முடிவு செய்தபடியே இத்தொகையை சட்டக்கல்லூரி முதல்வர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலைக்குள்மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
தேர்வை பொறுத்த வரை, ஜனவரி 21ம் தேதி முதல் நடத்தலாம். ஜனவரி 17ம் தேதி கல்லூரியை திறக்க வேண்டும்.தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களை மட்டுமே விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும். விடுதியை சுற்றிலும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.
விடுதியின் துணை காப்பாளரின் அனுமதியின்றி மாணவர்கள் எவரும் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாதுஎன்றும் உத்தரவில் கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications