மேம்பால ஊழல்: கருணாநிதி, ஸ்டாலின் மீது விரைவில் நடவடிக்கை?
சென்னை:
மேம்பால வழக்கில் விசாரணை முடியும் நிலை எட்டியுள்ளதால், கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் தலைமைசெயலாளர் நம்பியார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் மீது எந்த நேரமும்நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தமிழக கூடுதல் டி.ஜி.பி. ரமணி தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
மேம்பால ஊழல் வழக்கு விசாரணை மிக தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், அரசுஅலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் உட்பட இதுவரை 80 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
கருணாநிதி, ஸ்டாலின், நம்பியார் ஆகிய மூவரிடமும் முதற்கட்ட விசாரணை முடிந்து விட்டது. தேவைப்பட்டால்மீண்டும் விசாரணை நடத்தப்படும்.
மேம்பால ஊழல் வழக்கு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த வழக்கு குறித்து சேகரிக்கப்பட்டஆவணங்கள் சட்ட நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்றும் மேம்பாலம் கட்டப்பட்ட பொருட்களின்தரத்தையும் அறிய ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சட்ட நிபுணர்களிடமிருந்தும், ஆய்வகங்களிலிருந்தும் அறிக்கை வந்தவுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும். விசாரணை முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அந்த நடவடிக்கை கண்டிப்பாகஎடுக்கப்படும் என்றார் ரமணி.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications