300வது விக்கெட்டை வீழ்த்தி கும்ப்ளே சாதனை
பெங்களூர்:
பெங்களூரில் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்2வது நாளான இன்று (வியாழக்கிழமை) இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தன்னுடைய 300வதுவிக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் கபில்தேவுக்கு (434 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக 300வது விக்கெட்டைப் பெறும் இரண்டாவதுஇந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கும்ப்ளேக்குக் கிடைத்துள்ளது.
ஆனாலும் கபில்தேவ் வேகப்பந்து வீச்சாளர் என்பதால், 300வது விக்கெட்டைப் பெறும் முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை கும்ப்ளே பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் மேத்யூ ஹோக்கார்டை எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் ஆக்கியதையடுத்து, கும்ப்ளே இந்தச்சாதனையை எட்டியுள்ளார்.
நேற்றைய முதல் ஆட்டத்தின்போதே கும்ப்ளே இச்சாதனையைச் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் இங்கிலாந்து அணியின் கடைசி ஆட்டக்காரரை இன்று வீழ்த்தியதன் மூலமாகத்தான் அவரால் இந்தச்சாதனையைப் படைக்க முடிந்தது.
இந்தியாவும் திணறல்:
இதற்கிடையே இந்த 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியாவும் திணறிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. தாஸ்குப்தா (டக் அவுட்) 4வதுஓவரிலேயே பிளின்டாப்பின் பந்தை டிரஸ்கோத்தின் கைகளில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேற, 12 ரன்கள்மட்டுமே எடுத்த லக்ஷ்மண் அவருடைய பந்திலேயே க்ளீன் போல்டானார்.
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 22 மட்டுமே.
இதையடுத்து சிவ் சுந்தர் தாசுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் கூட்டணி சேர்ந்தார்.இருவரும் நின்று நிதானமாக, இந்தியாவின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர்.
ஆனால் டெண்டுல்கரின் வேகத்துக்கு தாசால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்திய அணி 88 ரன்களைஎடுத்திருந்தபோது, பிளின்டாப்பின் பந்திலேயே அவரும் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
இன்றைய ஆட்டநேர இறுதியில் இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்திருந்தது.
முன்னதாக, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 என்ற நேற்றைய ஸ்கோருடன் இன்று களமிறங்கிய இங்கிலாந்துஅணி, மேலும் 81 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் இன்னிங்சை இழந்தது.
இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு 4 விக்கெட்டுகளும், சரண்தீப் சிங்குக்கு 3 விக்கெட்டுகளும்,கும்ப்ளேக்கு ஒரு விக்கெட்டும் (அவருடைய 300வது டெஸ்ட் விக்கெட்) கிடைத்தன.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 336/10 (123.3 ஓவர்கள்)
இந்தியா - 99/3 (43 ஓவர்கள்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications