புலிகளின் போர் நிறுத்தம்: இலங்கை அரசு வரவேற்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை இலங்கை அரசு வரவேற்றுள்ளது. விரைவில் இலங்கைஅரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சர் டிரோன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
பின்னர் பேசிய பெர்னாண்டோ, இந்த போர் நிறுத்தம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த நல்ல ஆரம்பமாகஇருக்கும் எனவும், அரசும் போர் நிறுத்தத்தை பற்றி விரைவில் அறிவிக்கும் என்றார்.
ஆனால் இதைப்பற்றி இலங்கை அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விடுதலைப் புலிகளுடனானஅமைதிப்பேச்சு வார்த்தையை பற்றி இந்தியாவுடன் ஆலோசனை செய்த பிறகே இந்த அறிவிப்பை வெளியிடும்என்று தெரிகிறது.
இந்த அறிவிப்புக்கு பிறகு நார்வே தனது சமாதான பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க உள்ளது. இலங்கைபிரதமரும் இந்த வார இறுதியில் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்கிராமரும் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தஅறிவிப்பை வரவேற்பதாக கூறியுள்ளார்.
ஐக்கிய தமிழர் விடுதலை முண்ணனியின் செயலாளர் வி.ஆனந்த சங்கரி, இந்த அறிவிப்பு தனக்கு மகிழ்ச்சியைஅளிப்பதாகவும், இதன் மூலம் விரைவில் இலங்கை இனப் பிரச்சனைக்கு நல்ல முடிவு ஏற்படும் என்றுநம்புவதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications