அமெரிக்க விமானத்தைத் தகர்க்கும் முயற்சி முறியடிப்பு
பாஸ்டன்:
பாரிசிலிருந்து மியாமிக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-63 விமானத்தை வெடிகுண்டால்தகர்க்க பயணி ஒருவர் மேற்கொண்ட முயற்சியை விமான ஊழியர்கள் முறியடித்தனர்.
விமானம் நடு வானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்திலிருந்த ஒரு பெண் ஊழியருக்கு ஏதோ கருகும்வாடை அடித்துள்ளது. உடனே அந்த விமானப் பணிப்பெண் தீவிரமாகக் கண்காணித்துள்ளார்.
விமானத்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்த ஒரு பயணி தன் ஷூக்களிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த வயர்களை"ப்யூஸ்" பண்ணும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது தெரிய வந்தது.
உடனடியாக விமானப் பணிப்பெண் அவரைத் தடுத்துள்ளார். இதையடுத்து பணிப்பெண்ணின் கையை அந்தப்பயணி கடித்து விட்டார். உதவிக்கு வந்த மற்றொரு பணிப்பெண்ணையும் அப்பயணி தாக்கிக் காயப்படுத்தினார்.
இதற்குள் சுதாரித்துக் கொண்ட மற்ற பயணிகள் அந்த நபரைச் சுற்றி வளைத்து, அவனை இறுக்கையோடுபெல்ட்டால் கட்டிப் போட்டனர்.
அதே விமானத்தில் பயணம் செய்த இரு டாக்டர் பரபரவென்று செயல்பட்டு அவனை மயக்கமடையச் செய்தனர்.அவனுடைய ஷூக்கள் உடனடியாகக் கழற்றப்பட்டன. இந்த ஷூக்களில் ஒன்றில்தான் அவன் வெடிகுண்டைமறைத்து வைத்திருந்தான்.
இதற்கிடையே பைலட்டுகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அமெரிக்க வான் எல்லையைத் தொட்டவுடன்இரு அமெரிக்க எப்-15 ரக போர் விமானங்கள் இவ்விமானத்துக்குப் பாதுகாப்புக்கு வந்துவிட்டன.
பின்னர் அவ்விமானம் பாஸ்டன் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகளும்பத்திரமாகத் தரையிறங்கினர்.
அவனை அள்ளிக் கொண்டுபோன அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. நடத்திய விசாரணையில்,ரிச்சர்ட் ரெய்ட் என்ற பெயரில் போலியான இங்கிலாந்து பாஸ்போர்ட்டை அவன் வைத்திருந்தது தெரிய வந்தது.
ஆனால் அவன் மத்திய கிழக்கு நாடுகளில் ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்தவன் என்றும், 28 வயதான அவன்தன்னுடன் எந்தவிதமான லக்கேஜையும் எடுத்து வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவனுடைய ஷூவில் இருந்த சி-4 டெட்டனேட்டர் ரக வெடிகுண்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டது.ஷூவில் இது மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும், இதன் மூலம் விமானம் முழுவதையுமே தகர்த்திருக்க முடியும்என்று வெடிகுண்டு நிபுணர்கள் கூறினர்.
கிறிஸ்துமசை முன்னிட்டு தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிதான் இது என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications