ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்: விரைவில் தேதி அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் ஆண்டிப்பட்டி உள்பட 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்என்று தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னையில் அவர் இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராஞ்சல் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல்நடக்கவுள்ளது.
அவற்றுக்கான தேர்தல் தேதிகள் அதி விரைவில் அறிவிக்கப்படும். அப்போது தமிழக இடைத் தேர்தலுக்கானதேதியும் அறிவிக்கப்படும்.
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள நான்குமாநிலங்களிலும் மின் வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்காளர் பட்டியல் அனைத்தும் இன்டர்நெட்டிலும் போடப்படுவதால், இதில் நடக்கும் முறைகேடுகளும்பெருமளவில் தவிர்க்கப்பட உள்ளன. மேலும் இதன் மூலம் வாக்காளர்களே நேரடியாக பட்டியலில் தங்கள்பெயர்கள் உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு உள்கட்சித் தேர்தலும் முக்கியமானது. அதனால் உள்கட்சித் தேர்தலைநடத்தாத கட்சிகளின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதா போட்டியிடப் போவதால் ஆண்டிப்பட்டி தொகுதியில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை நலத் திட்டங்களை அரசுஅறிவிப்பதில் தவறில்லை என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
திடீரென்று இந்திய-பாகிஸ்தான் போர் வந்தாலும் தேர்தல் நடக்குமா என்று நிருபர்கள் கேட்டபோது, அதுபற்றிஇப்போது ஒன்றும் கூற இயலாது என்றார் கிருஷ்ணமூர்த்தி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications