அதிமுக ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: கருணாநிதி
சென்னை:
நங்கள் அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணவும் மாட்டோம், முயற்சி செய்யவும் மாட்டோம்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியை கருணாநிதி கலைக்க நினைக்கிறார் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டி அறிக்கைவெளியிட்டிருந்தார். இதற்கு விளக்கம் அளித்து கருணாநிதி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
இந்த ஆட்சி மட்டும் அல்ல எந்த ஆட்சியும் ஜனநாயக முறைப்படி ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தவேண்டும் என்றகொள்கை உடையவன் நான். ஆனால் வாஜ்பாய் அரசை கவிழ்த்தவர் ஜெயலலிதா.
வீரப்பனை பிடிக்க தாமதமாகிறது என்பதற்காக திமுக ராஜினாமா செய்யவேண்டும் என்றும், 356ஐ பயன்படுத்திஜெயலலிதா கலைக்க சொன்னதுக்கும் தேதி வாரியாக என்னிடம் பத்திரிக்கை ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் நாங்கள் இந்த ஆட்சியை கலைக்க எண்ணவும் மாட்டோம், முயற்சி செய்யவும் மாட்டோம் என்று கூறினார்கருணாநிதி.
உங்களின் தாக்குதலில் இருந்து அதிமுகவை காப்பாற்ற எம்.ஜி.ஆர். எத்தனையோ சோதனைகளை சந்தித்தார் என்றுஜெயலலிதா கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டனர்.
எம்.ஜி.ஆருக்கு உடல்நலம் சரியில்லை, மேலும் பேசவே முடியாதவர் எப்படி முதல்வராக பதவி வகிக்கலாம்? என்செல்வாக்கு வளர்வது அவருக்கு பிடிக்கவில்லை, அதனால் என் மீது எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்றுஅப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஆங்கிலத்தில் தன் கைப்பட ஒரு கடிதம் ஜெயலலிதா எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் நகல் பத்திரிக்கைகளில் வந்ததை எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் மறந்திருப்பார்கள்என்று நினைத்து கொண்டு இந்த மாதிரி ஓர் அறிக்கையை அனுப்பியிருக்கிறார் என்று கருணாநி கூறினார்.












Click it and Unblock the Notifications