நாகை-நாகூர் பாலம்: கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்-நாகூர் நெடுஞ்சாலையில் உள்ள வெட்டாற்றில் கட்டப்படும் பாலத்தை விரைவில் முடித்து தருமாறுபொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்-நாகூர் நெடுஞ்சாலையில் வெட்டாற்றில் இரும்பு பாலம் பல வருடங்களாக இருந்து வந்தது.நாகப்பட்டினத்தில் இருந்து நாகூருக்கு இந்த வழியாக தான் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்த பாலம் பழுதடைந்து விட்டதால் தமிழக அரசு ரூ.6 கோடி செலவில் இந்த இடத்தில் இரு வழியில் செல்லக்கூடிய வகையில் பாலம் கட்டும் பணியை மேற்கொண்டு வந்தது.
இந்த பணி பாதி முடிந்து விட்ட நிலையில், என்ன காரணத்தினாலோ பாலம் கட்டும் பணியை நிறுத்தி விட்டனர்.அதனால் தற்காலிகமாக இங்கு 20 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு பாலம் கட்டப்பட்டது.
சமீபத்தில் பெய்த கன மழையினால் இந்த பாலமும் பழுதடைந்து விட்டது. இதனால் போக்குவரத்து பெரிதும்பாதிக்கப்பட்டது. அதனால் அந்த பகுதி மக்கள், மீனவர்கள் உதவியுடன் சிறிய படகு மூலம் ஆற்றை கடந்துவருகின்றனர்.
ஆனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம் என்று பொது மக்கள்கருதுகின்றனர். அதனால் பொதுப்பணித்துறையிடம் பாதியில் நின்ற பாலம் கட்டும் பணியை போர்க்காலநடவடிக்கையாக சீக்கிரத்தில் முடித்து தருமாறு பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications