ஒசாமா மரணம்: தலிபான் தலைவர் தகவல்
இஸ்லாமாபாத்:
அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் நுரையீரல் நோயினால் இறந்து விட்டதாகதலிபான் தலைவர் ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒசாமா அமெரிக்க படைகளின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் தோரா போரா மலைப்பகுதியில்பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது. அதனால் அந்த பகுதிகளில் அமெரிக்கா மற்றும் தலிபான் எதிர்ப்பு படைகள்பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தலிபான் தலைவர் ஒருவர் ஒசாமா இயற்கையாகவே மரணமடைந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பாகிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் அப்சர்வர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:
ஏற்கெனவே நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த ஒசாமா, அமெரிக்க தாக்குதலால் தன் நோய்க்கு சரியானபடிசிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவரது உடல் நிலை மோசமானது.
இதைத் தொடர்ந்து அவர் சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அவர் கடைசியாக மறைந்து இருந்தஇடத்திலேயே புதைக்கப்பட்டார்.
அவரது இறுதி சடங்கில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர். நானும்அதில் கலந்து கொண்டேன என்று அவர் கூறினார்.
ஆனாலும், ஒசாமாவின் மறைவு பற்றி அமெரிக்கா எந்த முடிவுக்கும் வரவில்லை. அவரை தேடும் பணி வழக்கம்போல நடந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications