கருணாநிதிக்கு போட்டியாக தமிழ் மாநாடு: தம்பிதுரை
சென்னை:
கண்ணகி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து கருணாநிதி தலைமையில் நடக்கவுள்ள தமிழ் மாநாட்டுக்குபோட்டியாக, தமிழறிஞர்கள் மாநாட்டை நடத்தப் போவதாக கல்வி அமைச்சர் தம்பி துரை கூறியுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றிய கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ கோரி, திமுகதலைவர் கருணாநிதி தலைமையில் பல்வேறு தமிழறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும்மாநாட்டை வரும் 5ம் தேதி சென்னை சீரணி அரங்கத்தில் நடத்தப் போவதாக கருணாநிதி அறிவித்தார்.
இந்த மாநாட்டுக்கு போட்டியாக அரசு சார்பில் தமிழறிஞர்களை கொண்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கை நடத்தப்போவதாக கல்வி அமைச்சர் தம்பிதுரை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் வழிக் கல்விக்கு வழிவகுக்கவும், தமிழை வளர்க்கவும், தமிழ் பண்பாட்டை உயர்த்தி நிலை பெறச் செய்யவும்ஜெயலலிதா தலைமையில் 1991-96ம் ஆண்டு நடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தினார்.
கருணாநிதி ஆட்சி செய்தபோது தமிழை நிலை நாட்ட என்ன நடவடிக்கை எடுத்தார். பொறுப்புள்ள பணியில்இருந்த போது, பொறுப்புள்ள பணிகளை செய்யாமல் பொழுதைப் போக்கி கொண்டு இருந்தார்.
இப்போது தனது துதிபாடிகளை தூண்டிவிட்டு, ஜெயலலிதா வழிநடத்தும் அரசுக்கு எதிராக தூபம் போட்டுகொண்டிருக்கிறார்.
தமிழ் வழிக் கல்விக்கு வழிவகுக்கவும், தமிழை வளர்க்கவும், தமிழ் பண்பாட்டைத் தழைக்க செய்யவும், வரும்ஜனவரி 2ம் தேதியன்று மாலை 5 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலகக் கட்டிடத்தில்தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழறிஞர்கள், தமிழ்ப்பாவலர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் திரண்டு வந்து அன்னைத் தமிழின்ஆக்கத்துக்கு வழி காண வேண்டி அழைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications