எல்லையில் பதற்றம் வேண்டாம்: ஐ.நா. வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
ஐக்கிய நாடுகள்:
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னான் இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள், போர்வேண்டாம் என்று அன்னான் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு நிலவ வேண்டும் என்றும் அது இன்னும் மேம்பட வேண்டும் என்றே மற்றநாடுகள் விரும்புகின்றன. அதனால் அமைதியான சூழ்நிலை நிலவ இரு நாடுகளுமே ஒத்துழைக்க வேண்டும்என்றும் அன்னான் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமையே இக்கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications