தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப ஜன.5 வரை காலக்கெடு நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பிலும் குறைக்கப்பட்ட 50 சதவீத தூதரக ஊழியர்கள் தத்தம் நாடுகளுக்குத்திரும்புவதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குள் இவ்வூழியர்கள் தங்கள் குடும்பங்களுடன் வெளியேற வேண்டும்என்று இந்தியா அறிவித்து விட்டது.
இதையடுத்து நேற்று இரவோடு இரவாக பாகிஸ்தானும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து இரு தரப்பிலும் குறைக்கப்பட்ட தூதரக ஊழியர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பத்தயாராக இருந்தனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இதற்கான காலக்கெடுஅடுத்த மாதம் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications