புதுவையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஎன்று அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.
காங்கிரஸின் 117வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரங்கசாமி தலைமையில் காங்கிரஸார், மகாத்மாகாந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறகு நடந்த கூட்டத்தில் பேசிய ரங்கசாமி, பாண்டிச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த எல்லா நடவடிக்கைகளும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ரங்கசாமி.












Click it and Unblock the Notifications