சேலம் மாநகராட்சி: திமுக ஆட்சியில் போர்வெல் போடுவதில் ரூ.5.25 கோடி ஊழல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மாநகராட்சி போர்வெல் ஊழல் தொடர்பாக தனியார் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம்ரூபாய் மதிப்புள்ள இரும்பு பைப்புகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த திமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியில் போர்வெல் போடுவதில் ரூ.5.25 கோடி ஊழல் நடந்துள்ளதாகவழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சேலம் சீரங்கப்பாளையம் அருகே வித்யாலயா ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில்மாநகராட்சிக்கு சொந்தமான இரும்பு பைப்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மேயர் சுரேஷ்குமாருக்கு போன்மூலம் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மேயர், மண்டலத் தலைவர் பாலு மற்றும் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர். கோவிந்தராஜ்என்பவர் வாடகைக்கு எடுத்திருக்கும் அந்த இடத்தில் ஏராளமான இரும்பு மற்றும் பி.வி.சி., பைப்புகள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து அவரிடம் விசாரணை செய்ததில், மாநகராட்சி குடிநீர் துறை பணியாளர்களான கணேசன், தயாநிதி,பூபதி ஆகியோர் இந்த பொருட்களை வைத்துவிட்டுச் சென்றதாக கூறினார்.

இந்த பைப்புகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டு, கோட்டையில் உள்ள குடோனுக்குகொண்டு செல்லப்பட்டன.

இது தொடர்பாக குடிநீர் துறை பணியாளர்கள் கணேசன், பூபதி, தயாநிதி மற்றும் அப்பகுதியின் இளநிலைபொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இது தொடர்பாக அஸ்தம்பட்டி மண்டல துணை கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+