வேலைக்கு வராத பஸ் ஊழியர்களுக்கு "நோ" சம்பளம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
போனஸ் அதிகம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் தரும்படிஉத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிக போனஸ் கேட்டு பஸ் போக்குவரத்து ஊழியர்களில் ஒரு பகுதியினர் கடந்த அக்டோபர் மாதம்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பணிக்கு வராத 16 நாட்களுக்கான சம்பளத்தை நிர்வாகம்பிடித்தம் செய்தது.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தவர்களில் போராட்டத்தில்ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் வேலை தர முடியாது என்று போக்குவரத்து செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா இந்த வழக்கை விசாரித்து இடைக்கால தீர்ப்பு வழங்கினார். இந்ததீர்ப்பில் கூறியிருப்பதாவது:
"நோ ஒர்க், நோ பே" என்ற விதிமுறையின் கீழ், போராட்டத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம்பிடித்தம் செய்தது சரி தான். இந்த சம்பளத்தை வழங்கும்படி உத்தரவிட முடியாது.
மேலும் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக வேலை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி வழக்கு முடிவில் தான்தீர்மானிக்க முடியும் என்று நீதிபதி அந்த தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications