இயல், இசை, நாடக மன்றத் தலைவராகிறார் டி.எம்.எஸ்.
சென்னை:
தமிழக இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தரராஜன்நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட டி.எம்.எஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர் இப்பதவியை வகித்த திரைப்பட இயக்குநர் இராம. நாராயணனின் பதவிக் காலம் கடந்த மேமாதமே முடிந்துவிட்டது. நேற்று வரை அப்பதவி காலியாகவே இருந்து வந்தது.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு டி.எம்.எஸ். இப்பதவியை வகிப்பார்.
மதுரையில் 1923ம் ஆண்டு பிறந்த டி.எம்.எஸ்., நான்கு தலைமுறையாக சினிமாவில் பாடிப் புகழ் பெற்றவர்.
அந்தக் கால நடிகர் நரசிம்ம பாரதியில் தொடங்கி இப்போதுள்ள விஜயகாந்த், சத்யராஜ் வரை ஏராளமானநடிகர்களுக்காகப் பின்னணி பாடிய அனுபவம் பெற்றவர் டி.எம்.எஸ்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய பெரும் நடிகர்களுக்கு இவர் பின்னணி பாடும்போது அவர்கள் பாடுவதுபோலவேதத்ரூபமாகப் பாடுவதில் வல்லவர் இவர்.
தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் பாடியுள்ள இவர், ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும்இசை அமைத்துப் பாடியுள்ளார்.
கலைமாமணி விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் டி.எம்.எஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications