காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க அதிமுக முயற்சி: இளங்கோவன் குற்றச்சாட்டு
ஈரோடு:
காங்கிரஸ், திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க செங்கோட்டையன் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்,இந்த போக்கை நிறுத்தாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசி விட்டேன். பெரும்பாலானதொண்டர்கள் அதிமுக கூட்டணியை ஏற்க தயாராக இல்லை.
தங்கபாலு, யசோதா போன்ற சிலர் தான் சுயநலத்துக்காக அதிமுக கூட்டணி பற்றி பேசி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பது புதிய விஷயமில்லை. காங்கிரஸ் துவக்கத்தில் இருந்து சிலகொள்கைகளுக்காக கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. ஆனால் தற்போது சிலர் தங்களதுசுயநலத்துக்காக கோஷ்டி அரசியல் நடத்துகின்றனர்.
காங்கிரஸ், திமுக, தமாக எம்.எல்.ஏ.க்களை அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் வலியசந்தித்து பேசி அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு கைமாறாக பணம் தருவதாகவும்கூறியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் விலை போக மாட்டார்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்துஇந்த வேலையில் அவர் ஈடுபட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து வரும் 5ம் தேதி கட்சிதலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறேன். அதன் பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அவர்கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications