மத்திய அரசுக்கு எதிர்க் கட்சிகள் பச்சைக் கொடி
டெல்லி:
பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக எதிர்க் கட்சிகள்தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை ஏதும் எடுக்காததைச் சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சிகள், அந்நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தேவைதான் என்று கூறின.
பாகிஸ்தானிலிருந்து இந்தியத் தூதரை திரும்ப அழைத்தது, பஸ்-ரயில் போக்குவரத்துக்களை ரத்து செய்தது,தூதரக ஊழியர்களைப் பாதியாகக் குறைத்தது போன்ற மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
ஆனால் இரு நாடுகளுக்கிடையே போர் மட்டும் வேண்டாம் என்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் வாஜ்பாயைக்கேட்டுக் கொண்டனர்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பற்றி விளக்குவதற்கும் ஆலோசனைகளைப் பெறுவதற்கும்முக்கிய நாடுகளுக்கு இந்தியக் குழுவினரை அனுப்புவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மூத்த எதிர்க் கட்சித் தலைவர்கள் தலைமையில் ஜனவரி 15ம் தேதிக்குள் இக்குழுவினர் வெவ்வேறு நாடுகளுக்குச்செல்லவுள்ளனர் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன் தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரைக் குவித்திருப்பது முழுக்க முழுக்க பாதுகாப்பு நடவடிக்கைகக்காகத்தான்என்று இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்திருப்பதுநாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதாக மகாஜன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications