ஸ்ரீரங்கம் கோவில் குளத்தில் முதலை: பக்தர்கள் பீதி
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் கோவில் குளத்திற்கு "அழையா விருந்தாளி"யாக வந்த ஒரு முதலை இன்று (திங்கள்கிழமை) பக்தர்களைக்குளிக்க விடாமல் செய்துவிட்டது.
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் குளிப்பதற்கென்று ஒரு குளம் உள்ளது. இக்குளத்தில் குளிப்பதை பக்தர்கள்புனிதமாகக் கருதுகின்றனர்.
இன்று காலை இக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பக்தர் அங்கே ஒரு முதலையும் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
விஷயம் மளமளவென்று பரவியதில் குளத்தில் குளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
சில துணிச்சல் மிக்க இளைஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு முதலையைப் பிடிக்க முயற்சித்தனர். இதற்குள்தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும் அந்தக் குளத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அனைவரும் சேர்ந்து அந்த முதலையை வளைத்துப் பிடித்து வாயைக் கட்டிப் போட்டனர்.
சிறிது நேரத்திலேயே அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், முதலையைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.
இந்த முதலை பிடிபட்ட போதிலும் இன்னும் நிறைய முதலைகள் தங்கியிருக்கும் என்று அஞ்சிய பக்தர்கள், அந்தக்குளத்தின் பக்கமே தலை காட்டாமல் குளிக்காமலேயே சென்று கொண்டிருக்கின்றனர்.
இச்சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications