புத்தாண்டு: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
புத்தாண்டை முன்னிட்டு திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசிக்க நேற்றும், இன்றும் (செவ்வாய்க்கிழமை)பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதையடுத்த நேற்றும், இன்றும் திருப்பதிக்கு பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று மட்டும் ஒருவர் பெருமாளை தரிசிக்க 40 மணி நேரம் ஆனது. புத்தாண்டை முன்னிட்டு ரூ.50, ரூ.100சிறப்புக் கட்டண வழி நேற்று இரவு முழுவதும் திறந்தே இருந்தது.
இதனால் சிறப்பு பூஜையை கூட கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்து விட்டது.
புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான சுகாதார பணியாளர்களை கோவில் நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியுள்ளது.
பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் புத்தாண்டு காலண்டரையும், பெருமாள் புதியபோட்டோவும் வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications