பதற்றம் தணிக்க பாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் பிரதமர்
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்யும் விதமாகப் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் வரும் 7ம் தேதி பாகிஸ்தான் வரவுள்ளார்.
மேலும் இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 20 தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியலையும்பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது.
இதற்கிடையே எல்லைப் பகுதிகளில் இரு தரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல்,இந்திய-பாகிஸ்தான் படையினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
இந்தத் துப்பாக்கிச் சண்டை எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் என்ற சூழ்நிலையில், ஒருநாள் பயணமாகபாகிஸ்தானுக்கு வருகிறார் பிளேர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை ஓரளவுக்காவதுகுறைக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார் பிளேர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் படைக் குறைப்பைப் பற்றி விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும்பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தாருடன் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து வெளியுறவுஅமைச்சர் ஜாக் ஸ்ட்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களை பாகிஸ்தான் கைதுசெய்திருப்பதை ஜாக் வரவேற்றார்.
ஆனாலும் பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் அதிகம் உள்ளன என்று கூறிய ஜாக்,அதன் மூலம் இரு நாடுகளும் போரைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு வரும் பிளேர், அப்படியே பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
"சார்க்கில் வாஜ்பாய்-முஷாரப் சந்திக்க வேண்டும்":
சார்க் மாநாட்டின்போது இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைபொதுச் செயலாளர் கோபி அன்னான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம் தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இந்தவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கோபி அன்னான் யோசனை தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications