தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி: வாஷிங்டன் போஸ்ட்
வாஷிங்டன்:
தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக கைவிட வேண்டும் என வாஷிங்டன் டைம்ஸ் கூறியுள்ளது.
பாகிஸ்தான் அரசுக்கே தெரியாமல் தீவிரவாதிகள் செயல்படுவது போன்ற தோற்றத்தை அமெரிக்க அரசு ஏற்படுத்தமுயன்று வருகிறது. இதையடுத்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் உதவியே தேவையில்லைஎன்று இந்தியா அறிவித்தது.
இந் நிலையில் காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் அரசும், அந் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயும் தான்தூண்டிவிட்டு வருகின்றன என வாஷிங்டன் டைம்ஸ் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது.
அமெரிக்காவில் பெருமளவில் வாசிக்கப்படும் இந்த இதழில் கூறப்பட்டுள்ள விவரம்:
காஷ்மீர் பிரச்சனைக்கு மதவாதிகளும் அவர்களின் நெடுநாளைய நண்பருமான பர்வேஸ் முஷாரபும் தான் மிகமுக்கியக் காரணம். 1980ம் ஆண்டிலிருந்தே தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையை பாகிஸ்தான் அரசும்,ஐ.எஸ்.ஐயும் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் மட்டுமின்றி ஆப்கானிதானிலும் மதவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு கிடைத்து வந்தது. வருகிறது.
ஆனால், அமெரிக்காவின் மீது தாக்குதல் நடந்த பின்னர் தான் முஷாரபுக்கு நெருக்குதல் வந்தது. தீவிரவாதிகள்பக்கமா இல்லை அமெரிக்கா பக்கமா என்ற நிலை வந்தபோது வேறு வழி ஏதும் இல்லாததால் அமெரிக்காவைஆதரிக்க முஷாரப் ஒப்புக் கொண்டார்.
காஷ்மீர் தீவிரவாதிகள் விவகாரத்திலும் முஷாரப் மீது நெருக்குதல் கொடுத்தால் தான் பிரச்சனையைத் தீர்க்கமுடியும் என்பதை அதிபர் புஷ் உணர்ந்து கொண்டுவிட்டார். முஷாரப் காஷ்மீர் தீவிரவாதிகளை ஆதரிக்கிறாராஇல்லை அமெரிக்காவை ஆதரிக்கிறாரா என்று கேட்கும் நிலை வந்துவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் வாஜ்பாய், பர்வேஸ் முஷாரப் ஆகியோரிடம் அதிபர் புஷ்பேசியுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாதிகளை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரிப்பது அந் நாட்டுக்கு நல்லதல்ல. இது அந் நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும். தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
பின்-லேடன் உயிரோடு இருக்கிறான்:
இந் நிலையில் பின் லேடன் உயிருடன் தான் இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது.
ஈரானில் இருந்து இது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. ஈரானில் அல்-கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த இருவர்ரகசியமாய் சாட்டிலைட் தொலைபேசியில் பேசியதை அமெரிக்க ராணுவம் பதிவு செய்துள்ளது.
அதில் பேசிய இருவரும், நாம் பின் லேடனை (வேறு பெயர் சொல்லி குறிப்பிடுகிறார்கள்) டிவியில் தோன்றாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டு பார்க்கவே மிகப் பரிதாபமாக இருக்கிறார். அவரைஇந்தத் தோற்றத்தில் டி.வியில் காட்டுவது நமது ஆட்களின் (அல்-கொய்தா) மனபலத்தை குறைத்துவிடும்.இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர். இவர்களை அடையாளம் காண அமெரிக்காவால் முடியவில்லை.
இதனால் பின் லேடன் உயிரோடு தான் இருக்கிறான் என அமெரிக்கா கருதுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications