இலங்கை: புலிகள் பகுதிகளில் பொருளாதார தடை நீக்கம்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் பொருள்கள் கொண்டு செல்வதற்கான பொருளாதாரதடையை விலக்குவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஒரு மாதத்திற்கு போர் நிறுத்தத்தை அறிவித்தன.
தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு நார்வேயைக் கேட்டுக் கொண்ட இலங்கை அரசு, இந்தியாவிடமும்அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தது.
இலங்கைப் பிரதமராகப் பதவியேற்ற கையோடு இந்தியத் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்டுவிட்டுத்திரும்பியுள்ளார் விக்கிரமசிங்கே.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் பொருள்கள் கொண்டு செல்வதற்கான தடையைநீக்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்கூறியிருப்பதாவது:
வடக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வந்த பொருளாதாரத் தடைஇன்றிலிருந்து நீக்கப்படுகிறது.
அதன்படி வெடிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் உட்பட 10 பொருள்கள் தவிர மற்ற பொருட்களை அந்தபகுதியில் இனி எடுத்து செல்லலாம்.
சிமெண்ட் மற்றும் எரிபொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே போர் நிறுத்தத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ள விடுதலைப் புலிகள் இலங்கை அரசுமேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தை முயற்சிகளைப் பற்றி இதுவரை எதுவும் கூறவில்லை.
தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொருளாதாரத் தடை விலக்கப்பட்டிருப்பதன் மூலம் இனிஅவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications