காங்கிரசில் சேருமாறு இளங்கோவன் கெஞ்சல்: வாசன் குழப்பம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் இணையுமாறு அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் அழைப்பு விடுத்ததோடு நில்லாமல்,வாசனின் இல்லத்திற்கும் சென்று இதுகுறித்து இளங்கோவன் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பிரிந்து சென்ற காங்கிரஸ்தலைவர்களை இணைக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.
முதல் கட்டமாக தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தனது கட்சியை கலைத்து விட்டுகாங்கிரஸில் சேரவுள்ளார். அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் காங்கிரஸில் சேர்க்க இளங்கோவன்முயற்சித்து வருகிறார்.
இதுதொடர்பாக மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து, சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக காங்கிரஸை உருவாக்க வருமாறுதமாகா தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமாகா தலைவர் வாசனை அவரது இல்லத்திற்கு சென்று இளங்கோவன்பார்த்து கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இளங்கோவனின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அழைப்பு குறித்துவிவாதிப்பதற்காக தமாகா மூத்த தலைவர்களின் கூட்டத்தை புதன்கிழமை வாசன் கூட்டியுள்ளார்.
அதில் காங்கிரஸோடு இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இருப்பினும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உடனடியாக காங்கிரஸில் சேராது என்றே கூறப்படுகிறது. காரணம்,தனது நிலையை பலப்படுத்திக் கொள்வதற்காகவே தமாகாவை காங்கிரஸில் சேர்க்க இளங்கோவன் முயற்சிப்பதாகசில தமாகா தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
மேலும், காங்கிரஸில் இணைவதால் தமாகாவுக்கு எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்றும் அவர்கள்கூறுகிறார்கள்.
பேசாமல், அதிகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொள்வதே நல்லது என்று இன்னொரு பிரிவு தமாகாதலைவர்கள் கருதுகிறார்கள். இளங்கோவனை நம்பி செல்லக் கூடாது என்று அவர்கள் வாசனை எச்சரித்துள்ளதாகத்தெரிகிறது.
இந்த நிலையில் எந்த முடிவை எடுப்பது என்பது தெரியாமல் வாசன் குழம்பிப் போயுள்ளார். இளங்கோவன்தன்னை நேரில் வந்து சந்தித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து விவாதிப்பதற்காக மூத்த தலைவர்களின் கூட்டத்தைக்கூட்டியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications