ஆண்டிப்பட்டி: தேர்தல் விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் தினகரன்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பிரச்சார விளம்பரங்களில், ஏற்கெனவே இருந்த தினகரன் எம்.பி.யின்பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதால, தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துவருகின்றன.
கடந்த ஒரு மாதமாக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் ஆண்டிப்பட்டியில் குவிந்து தேர்தல் பணியாற்றிவருகின்றனர். நகரின் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் ஜெயலலிதா படத்துடன் தேர்தல் வாசகங்கள்வரையப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து இதற்காக பெயிண்டர்களை இங்கு வரவழைத்து பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களைஅதிமுகவினர் வரைந்து வருகின்றனர்.
அங்து முகாமிட்டிருக்கும் அமைச்சர்களும், அதிமுக விஐபிக்களும் சுவர் விளம்பரங்களில் அம்மா படம்எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று கருதினர். இதனால் ஏற்கெனவே வரைந்த படங்கள் அழிக்கப்பட்டு,ஜெயலலிதா கும்பிடுவது போன்ற படம் மாற்றி வரையப்பட்டு வருகின்றன.
ஆனால், மாற்றி எழுதப்பட்டு வரும் சுவர் விளம்பரங்களில் தினகரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்செல்வன் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் பெயர்கள் விளம்பரங்களில் வரக் கூடாது என அதிமுகதலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் தங்கத்தமிழ்ச் செல்வன், ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. கட்சியில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் புறக்கணிக்கப்படுவது இதுவேமுதல்முறையாகும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications