இலங்கைப் பிரதமரைக் கொல்ல ராணுவ அதிகாரி முயற்சி
கொழும்பு:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைக் கொல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தின் அருகே உள்ள மில்லினியம் சிட்டியை அடுத்த அத்துருகிரியா அருகே பெரும்அளவிலான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் நேற்றிரவில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ராணுவம் விரைந்து வந்து அந்த இடத்தில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியது. இந்த ஆயுதங்கள்இலங்கை ராணுவத்துக் சொந்தமானவை. இவை நரேஹென்பிடாவில் உள்ள ராணுவ போலீஸ் மையத்துக்குஎடுத்துச் செல்லப்பட்டன.
மறைந்த போக்குவரத்து அமைச்சர் காமினி அதுகொரலேவுக்கு இறுதியஞ்சலி செலுத்த விக்கிரமசிங்கே உள்ளிட்டதலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வர இருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் பிடிபட்டன.
இது குறித்த ஆரம்ப விசாரணையில் இலங்கை ராணுவத்தின் கேப்டனின் பெயர் அடிபடுகிறது. இவரும் மேலும் சிலராணுவ அதிகாரிகளும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கேயைக் கொல்லத் திட்டமிட்டுள்ள விவரம் விசாரணையில்தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரமசிங்கேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புலிகளுடன் அரசு விரைவில் ஒப்பந்தம்:
இந் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக புலிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு முடிவுசெய்துள்ளது என அரசியல் விவகார அமைச்சர் பெரிஸ் கூறினார்.
நேற்று தான் தமிழர் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை இலங்கை அரசு நீக்கியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications