18,000 திடீர் வாக்காளர்கள்: அதிமுக மீது திமுக குற்றசாட்டு
சென்னை:
விதிகளுக்குப் புறம்பாக சைதாப்பேட்டை தொகுதியில் திடீரென 18,000 வாக்காளர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் வரும் பிப்ரவரி 21ம் தேதிஆண்டிப்பட்டி, வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டையில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் புதிய வாக்காளர் பட்டியலில் திடீரென 18,000 வாக்காளர்களை அதிமுக அரசுசேர்த்துள்ளதாகவும் இவர்களை உடனடியாக பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் முன்னாள் திமுகஅமைச்சர் பொன்முடி தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை தொகுதியில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி கடந்த 31ம் தேதி மாலை 5.30 மணியுடன்முடிவடைந்தது.
அப்போது மாலை 5.30 மணிக்கு, 18,000 பேரின் பெயர் பட்டியல்களுடன் வந்து இதையும் வாக்காளர் பட்டியலில்சேர்க்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறினர்.
அது விதிக்கு புறம்பானது என்று அங்கிருந்த எங்கள் கட்சியினர், வாக்காளர் சேர்ப்பு அதிகாரியிடம் கூறவேஅவர்கள் வாங்க மறுத்து விட்டனர்.
பின்னர் வாக்காளர் கணக்கெடுப்பு அதிகாரிகளின் ஜீப் அன்று மாலையே அதிமுகவைச் சேர்நத சைதை துரைசாமிவீட்டுக்கு சென்று, அந்த 18,000 பேரின் பெயர்கள் விதிக்கு புறம்பான வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய தேர்தல் கமிஷனருக்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்பியுள்ளோம். இப்படித்தான் ஆண்டிப்பட்டிமற்றும் வாணியம்பாடி தொகுதிகளிலும் செய்வார்கள். விதிக்கு புறம்பான வகையில் சேர்க்கப்பட்ட அந்தஆயிரக்கணக்கானவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications