பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது: வாஜ்பாய்
காத்மாண்டு:
எல்லை தாண்டி வந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளுக்கு உதவுவதையும், அவர்களுக்கு ஆதரவுதருவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைநடத்த நான் தயாராக இல்லை என இந்திய பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாகக் கூறினார்.
இந்திய நாடாளுமன்றம், காஷ்மீர் சட்டசபை ஆகியவை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது இந்தியஜனநாயகத்தின் இதயத்தை தாக்கியது போன்றாகும்.
பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணஉதவி மற்றும் புகலிடம் அளித்து வருகிறது.இந்த போக்கை அந்த நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும், தீவிரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களை அமலாக்க வேண்டும்.
தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தீவிரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் நாடுகள் தட்டிக் கேட்கவேண்டும். தீவிரவாதம் குறித்து இந்தியா திரும்ப திரும்ப சுட்டிக் காட்டியபோதெல்லாம் அதை உலக நாடுகள்கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா மீது தாக்குதல் நடந்த பின்னர் தான் தீவிரவாதத்தை எதிர்த்து நடவடிக்கைஎடுக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியாவின் மதசார்பின்மை, சுதந்திரம் ஆகியவற்றை மதத் தீவிரவாதிகளால் ஏற்க முடியவில்லை. இவர்களுக்குசில நாடுகள் போதைப் பொருள் கும்பல்கள், மதவாதிகள், ஹவாலா நோட்டுக் கும்பல், ஆயுதங்கள் நடத்தும்கும்பல்கள் ஆகியவை மூலமாக உதவிகள் செய்து வருகின்றன.
இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications