வணிக வளாகத்தைத் திறக்க ஈரோடு மக்கள் கோரிக்கை
ஈரோடு:
ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை திறக்க கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரோடு பஸ் நிலையத்துக்கு அருகில் ரூ.1 கோடி செலவில் ஈரோடு நகராட்சியால் வணிக வளாகம் ஒன்றுகட்டப்பட்டது.
அந்த பகுதியை ஆக்கிரமித்திருந்த தனியார் கடைகள், வீடுகள் போன்றவற்றை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஒருஆண்டுக்கு முன் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டது.
இங்கு 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளும் அந்த வணிகவளாகத்தில் உள்ளன.
ஆனால் கட்டி முடித்த புதிதில் கடைகளின் ஏலத் தொகை அதிகமாக இருப்பதாகவும், முன் வைப்பு தொகையும்அதிகமாக இருப்பதாகவும், இந்த கடைகளை வியாபாரிகள் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை.
அப்போதைய நகராட்சி ஆட்சியாளர்களும் இதை கண்டு கொள்ளவில்லை.
இப்போது நகராட்சி ஆட்சியாளர்கள் மாறி உள்ள நிலையில் பொது மக்கள், வியாபாரிகள் இந்த வளாகத்தைதிறக்குமாறும், ஏலத் தொகையை குறைக்குமாறும் நகராட்சி நிர்வாகிகள், கலெக்டர்களிடம் மனு கொடுத்துள்ளனர்.
இந்த ஒரு ஆண்டாக இந்த வளாகம் உபயோகப்படுத்தாததால் ஒரே குப்பை கூளமாகவும், இரவு நேரத்தில் சமூகவிரோதிகளுக்கு உபயோகமாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications