ஹஜ் யாத்திரை: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹஜ் புனித யாத்திரை தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது.
தமிழக அரசின் ஹஜ் குழுத் தலைவரும், மாநில அமைச்சருமான அன்வர் ராஜா கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
ஹஜ் குழு செயலாளர் அலாவுதீன், லியாவுதீன் சேட் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் துவங்கவுள்ள ஹஜ் யாத்திரையின்போது செய்யப்பட வேண்டிய விமானபயணத்திற்கான ஏற்பாடுகள், ஹாஜிகள் தங்குவதற்குத் தேவையான இட வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்துஇக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications