குணமடைந்த 70 மன நோயாளிகள் தொழில் தொடங்க அரசு உதவி
சென்னை:
ஏர்வாடியிலிருந்து கொண்டு வரப்பட்டு குணமடைந்து, அவர்களது குடும்பத்தினரால் ஏற்க மறுக்கப்பட்ட 70 மனநோயாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழகசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை இன்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செம்மலை இன்று வருகை தந்தார். மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்தபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து கொண்டு வரப்பட்ட மன நோயாளிகளில் 33 பேர் முற்றிலும்குணமடைந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 70 பேர் முற்றிலும் குணமடைந்த போதிலும் அவர்களை ஏற்க அவர்களது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.எனவே அவர்கள் தற்போது மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டுக்காகதினசரி ரூ.10.70 செலவிடப்படுகிறது. அதை ரூ.14.50 ஆக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
2005ம் ஆண்டுக்குள் தமிழகத்தை கண் புரை இல்லா மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது 2003ம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக அரசுக்குபுகார்கள் வந்துள்ளன. எனவே காவல், பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதுஎன்றார் செம்மலை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications