காமராஜர் நூற்றாண்டு விழா: அரசுக்கு தமாகா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மாநல காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் நேற்று (வியாழக்கிழமை)நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் காமராஜர் மட்டுமே. அவரதுநூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநதிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து திட்டம் வகுக்கவேண்டும்.
அதேபோல, காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு தபால் தலைகள், அஞ்சல் உறைகளை வெளியிடமத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications