முஷாரப் வருவதில் தாமதம்: சார்க் மாநாடு நாளைக்கு ஒத்திவைப்பு
காத்மாண்டு:
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று தொடங்குவதாக இருந்த தெற்காசிய நாடுகளின் 11வது சார்க் மாநாடு,பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் வருவதில் தாமதமானதால், நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், சீனாவிலேயே அவரது விமானம் நின்று கொண்டிருந்தது. பிற்பகலில் பனி மூட்டம் விலகியதையடுத்து3.30 மணிக்குத் தான் அவர் நேபாளம் வந்து சேர்ந்தார்.
முன்னதாக முஷாரபின் விமானத்துக்கு அனுமதித் தர இந்தியா முன் வந்தது. ஆனால், அதை பாகிஸ்தான்நிராகரித்தது. சீனா வழியாக நேபாளம் வந்து கொள்வதாக முஷாரப் கூறிவிட்டார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைக் கொண்டசார்க் அமைப்பு நாடுகளின் 3 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்குவதாக இருந்தது. முஷாரப் வராததால்பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், அவர் பிற்பகலிலும் வந்து சேரவில்லை. மாலை தான் அவர் வருவார் எனத் தெரிகிறது. இதனால்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி நாளை காலை 11.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியிருந்தால் மாலையில் அனைத்துத் தலைவர்களும் காத்மாண்டுவில்இருந்து 40 கி.மீ. தொலைவில் நாகர்கோட்டில் உள்ள ஒரு மலைப் பகுதி விடுதியில் சந்தித்துப் பேசுவதாகதிட்டமிடப்பட்டிருந்தது. அப்போது இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பர்வேஸ் முஷாரபும் சந்தித்துப் பேச வேண்டிவந்திருக்கும்.
முஷாரப் வந்து சேராததால் இந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால், வாஜ்பாய்-முஷாரப்இருவரும் தனியே சந்திக்க வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
இதில் 7 நாடுகளில் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான்சார்பில் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், இலங்கை சார்பில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, மாலத்தீவுஅதிபர் முகம்மத் கயூம், பங்களாதேஷ் அதிபர் பேகம் கலிதா ஜியா, பூடான் மன்னர் வாங்சுக், நேபாள பிரதமர் நர்பகதூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இப்போது சார்க் அமைப்பின் தலைவராக சந்திரிகா குமாரதுங்கா உள்ளார். இந்தப் பதவியை அவர் நேபாளப்பிரதமரிடம் இம் மாநாட்டில் அவர் ஒப்படைப்பார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சார்க் மாநாடு கூடுவதுமிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இம் மாநாட்டில் தீவிரவாதம் குறித்து தான் இந்தியா பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications