தீவிரவாதிகள் மீது பாக். நடவடிக்கை தீவிரம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளையும் அந் நாட்டு அரசு கைது செய்யஆரம்பித்துள்ளது.
சிந்து மாகாணத்தில் மட்டும் இந்த இரு அமைப்புகளையும் சேர்ந்த 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தஅமைப்பினர் தான் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள்.
இப்போது பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 80 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவர்கள்கைதாயினர். மேலும் இங்கு 220 பேர் வரை கைதாகலாம் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் பிற மாகாணங்களில்உள்ள 500 தீவிரவாதிகளைக் கைது செய்யவும் போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்குள் நுழையும் தீவிரவாதிகளில் பெரும்பாலனவர்கள் இந்த பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள பெரும்பான்மையான வீரர்களும் பஞ்சாபைச்சேர்ந்தவர்கள் தான. எனவே, இந்தியாவின் பாதுகாப்பில் இந்த மாகாணம் மிக முக்கியமான ஒன்றாகும்.
லஷ்கரின் தலைமையகம் இந்த மாகாணத்தின் முககிய நகரான லாகூர் அருகே உள்ள முரித்கேயில் அமைந்துள்ளது.ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம் இதே மாகாணத்தில் பாவல்பூரில் உள்ளது.
இப்போது தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையடுத்து இந்த தலைமையகங்கள் பாகிஸ்தான்ஆக்கிரமிப்பில் உள்ள முஷாபராபாத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கைதான தீவிரவாதிகளின் பெயர்களையோ, அவர்களின் விவரங்களையோ அரசு வெளியிடவில்லை.
இது இந்தியாவுக்கு சந்தேகத்தைத் தந்துள்ளது. கைதானது உண்மையான தீவிரவாதிகள் தானா அல்லதுகண்துடைப்புக்காக சிலரைக் கைது செய்துவிட்டு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுவிட்டதாகபாகிஸ்தான் பத்திரிக்கைகளுக்கு செய்திகளைப் பரப்பி வருவதாக இந்திய உளவுப் பிரிவுகள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் தலைமறைவாகி வருவதாகவும் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications