ஜெ. போட்டியிடக் கோரி 1000 விண்ணப்பங்கள்
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிடக் கோரி 1000 மனுக்கள்விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் சட்டசபை இடைத் தேர்தல் நடக்கவுள்ள ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகியதொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து வெள்ளிக்கிழமை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஒரு நாள் மட்டுமே விண்ணப்பங்கள் வாங்கப்படும் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகதொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
முதல் விண்ணப்பமாக ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி முதல்வர் பன்னீர் செல்வம்விண்ணப்பத்தைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா போட்டியிடக் கோரி பல பேரும் மனுக்கள்கொடுத்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை வரை ஜெயலலிதா போட்டியிடக் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களின்எண்ணிக்கை 1000 ஆக இருந்தது. 3 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிடக் கோரி இந்த விண்ணப்பங்கள்கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு கட்சியின் தலைவருக்கு ஆதரவாக இவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளது இதுவரை நடக்காதது என்றுகூறப்படுகிறது. ஒரு விண்ணப்ப மனுவுடனும் ரூ. 10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருந்தும் தங்களது தலைவியின் மீது கொண்ட அன்பு காரணமாக அதிமுக பிரமுகர்கள் பணத்தைக்குறித்துக் கவலைப்படாது விண்ணப்ப மனுக்களாக கொடுத்துத் தள்ளி விட்டனர்.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் எம்.எல்.ஏ.சைதை துரைசாமி, சைதை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி விண்ணப்பித்தார். நடிகர் ராதாராவிதனக்கு சைதை தொகுதியில் சீட் கொடுக்கக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications