தமிழகம் முழுவதும் மே மாதத்துக்குள் தொலைபேசித் துறையின் செல்போன் சேவை
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வரும் மே மாதத்துக்குள் தொலைபேசித் துறையின் சார்பில் செல்போன் சேவை தொடங்கப்படும் எனதமிழ்நாடு தொலைபேசித்துறையின் பொது மேலாளர் வாசுதேவன் கூறினார்.
தஞ்சை வந்த வாசுதேவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக தொலைபேசித்துறை குறைவான கட்டணத்தில் செல்போன் வசதி செய்து தர முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் வரும் மே மாதத்துக்குள் 1.30 லட்சம் செல்போன்களுக்கு இணைப்பு வழங்கப்படும்.
சென்னை நீங்கலாக 68 முக்கிய ஊர்களுக்கு செல்போன் வசதி முதலில் கொடுக்க உள்ளோம். முதல் கட்டமாககேவை நகருக்கு 4,000 செல்போன் இணைப்புகள் கொடுத்துள்ளோம்.
பொதுமக்கள் தொலைபேசி தொடர்பாக ஏதாவது குறை இருந்தால் உடனடியாக தொலைத் தொடர்பு துறைக்குபுகார் கொடுக்கலாம். அங்கு குறையை நிவர்த்தி செய்ய கால தாமதம் ஏற்பட்டால், என்னுடைய தொலைபேசிக்கேநேரடியாகவும் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications