தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதத்தை பதிவு செய்து ஒலிபரப்பக் கூடாது: தம்பிதுரை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து ஒலி பரபப்பக் கூடாது என தமிழககல்வி அமைச்சர் மு.தம்பிதுரை கண்டிப்புடன் தெரிவித்தார்.

குளித்தலையில் 11,12ம் வகுப்பு ஆதி திராவிட மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில்வெள்ளிக்கிழமை தம்பிதுரை கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் போன்ற பாடல்களை டேப்பில் பதிவு செய்து ஒலிபரப்புவதுவாடிக்கையாகிவிட்டது.

இனி கல்வித்துறை நிகழ்ச்சிகளில் இப்பாடல்களை பதிவு செய்து பாடக்கூடாது. மாணவ, மாணவியர், கூட்டத்தில்இருப்போர் அனைவரும் சேர்ந்து பாடவேண்டும்.

சில ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கே செல்வதில்லை என புகார்கள் வருகின்றன. இதை பர்கூர் பள்ளியில் நான்கண்கூடாக பார்த்தேன்.

இன்னனும் சிலர் பள்ளிக்கே செல்லாமல் வேறு நபர்கள் மூலமாக பாடம் நடத்துகின்றனர். இதை அரசுஅனுமதிக்காது, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினால் தான் மாணவர்கள் முறையாக தேர்வு எழுதுவார்கள். மாணவர்கள்குறைவான மதிப்பெண் பெற்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியரே தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+