For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தப்பினான் முல்லா ஒமர்

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

தலிபான் தலைவன் முல்லா முகம்மத் ஒமர் மீண்டும் தப்பியோடிவிட்டான்.

ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மலைப் பகுதியில் பதுங்கியிருந்த அவனுக்கு புஷ்தூன்இனத்தைச் சேர்ந்த ஆதிவாசிப் படையினரும் தலிபான் படைகளும் பாதுகாப்பளித்து வந்தன.

ஆனால், இந்த இடத்தை அமெரிக்க விமானங்கள் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல இந்தஆதிவாசிகளை நார்த்தர்ன் அலையன்ஸ் ராணுவம் தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டதையடுத்து அவனைஒப்படைத்துவிட ஆதிவாசிப் படையினர் முன்வந்தனர்.

இது தொடர்பாக ஆதிவாசிகளுடன் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே முல்லா ஒமர் தப்பிச் செல்ல ஆதிவாசிகள் உதவியுள்ள விவரம்இப்போது வெளியாகியுள்ளது.

முதலில் பதுங்கியிருந்த இடத்தில் முல்லா ஒமரைக் காணவில்லை என நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் உளவுப்பிரிவு அதிகாரியான நஸ்ரதுல்லா நஸ்ராத் கூறினார்.

ஆனால், அங்கிருந்த தலிபான் படையினரில் பெரும்பாலானவர்கள் சரணடைந்துவிட்டனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X